கணவரின் சடலம் இருப்பது தெரியாமல் ஒரே விமானத்தில் கர்ப்பிணி பயணம்

கணவரின் சடலம் இருப்பது தெரியாமல் ஒரே விமானத்தில் கர்ப்பிணி பயணம்

1 mins read

கண்­ணூர்: ஓமா­னில் இருந்து கேர­ளா­வுக்கு விமா­னத்­தில் புறப்­பட்ட ஷிஃபானா­வுக்­குத் தம் கண­வ­ரின் சட­லம் அடங்­கிய சவப்­பெட்­டி­யும் அதே விமா­னத்­தில் எடுத்து­வரப்­படு­வது தெரிந்­தி­ருக்­க­வில்லை.

கேர­ளா­வின் கண்­ணூர் மாவட்­டம், சுழலி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் முகம்­மது சகீர், 30. கடந்த ஞாயி­றன்று மஸ்­கட்­டில் நண்­பர்­களு­டன் காற்­பந்து விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­போது அவ­ருக்­குத் திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்­டது. உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­போ­தும் அவ­ரது உயி­ரைக் காக்க முடி­ய­வில்லை. ஆயி­னும், சகீர் இறந்­து­விட்ட தக­வலை அவ­ரின் நண்­பர்­கள் ஷிஃபானா­வி­டம் தெரி­விக்­க­வில்லை.

மாறாக, சகீரை கொரோனா கிருமி தொற்­றி­விட்­ட­தா­க­வும் அவரை மருத்­து­வ­ம­னை­யில் தனி­மைப்­ப­டுத்தி வைத்­துள்­ள­தா­க­வும் கூறி­னர். மருத்­து­வ­ம­னை­யில் எவ­ரும் அவ­ரைப் பார்க்க முடி­யாது என்­ப­தால் ஷிஃபானா ஊர் திரும்­பு­வது நல்­லது என ஒரு­வ­ழி­யா­கச் சமா­தா­னப்­ப­டுத்தி, மறு­நாள் திங்­கட்­கி­ழமை அவரை கேர­ளா­வுக்கு விமா­னத்­தில் ஏற்­றி­விட்­ட­னர்.

மஸ்­கட்­டில் இருந்து கோழிக்­கோடு சென்ற அந்த ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் விமா­னத்­தி­லேயே சகீரின் சட­ல­மும் ஏற்றி அனுப்­பப்­பட்­டது. ஆனா­லும், வீடு வந்து சேரும் வரை ஷிஃபானா­வுக்கு சகீ­ரின் மர­ணம் பற்றி தெரி­யா­மல் பார்த்­துக்­கொண்­ட­னர்.

சகீ­ருக்­கும் ஷிஃபானா­வுக்­கும் ஆறு மாதங்­க­ளுக்கு முன்­னர்­தான் திரு­ம­ணம் நடந்­தது. முதன்­மு­றை­யா­கக் கண­வ­ரு­டன் மஸ்­கட் சென்ற ஷிஃபானா இப்­போது மூன்று மாதம் கர்ப்­ப­மாக இருப்பது குறிப்பிடத்தக்கது.