1,052 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

1,052 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

1 mins read

புதுடெல்லி: நாடு முழுவதும் வரி ஏய்ப்பு குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், நடப்பு நிதியாண்டில் மட்டும் வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள் வரும்போது எல்லாம், சட்டத்துக்கு உட்பட்டு சோதனை, பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வருமான வரித்துறை விசாரணைக்கு உள்ளாகும் நபர்களின் தகவல்களை வெளியிட, வருமான வரிச் சட்டம் விலக்கு அளிக்கிறது," என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கடந்த 2018 - 19ஆம் நிதியாண்டில், 983 நிறுவனங்களில் சோதனை நடத்தி, 1,584 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் அவர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.