நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் நால்வருக்கும் இன்று தூக்கு

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் நால்வருக்கும் இன்று தூக்கு

1 mins read
45a3e694-dbab-4d08-a5c4-b369b30557e4
-

புதுடெல்லி: குற்றவாளிக ளில் ஒருவர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்படுகின்றனர்.

நான்கு பேருக்கும் மார்ச் 20ஆம் தேதி (இன்று) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் குற்றவா ளிகளில் ஒருவரான பவன் குப்தா, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் குற்றம் நிகழ்ந்த போது தாம் சிறுவனாக இருந்ததாகவும், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து 4 பேரும் இன்று தூக்கிலிடப்படுவது உறுதியானதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.