லக்னோ: கோழிப் பண்ணைகளில் உள்ள சேவல்களை கொடூரமாகக் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
சேவல்கள் முட்டையிடாது என்பதால் அவற்றை தீயில் எரித்தோ, தண்ணீரில் மூழ்கடித்தோ, அரவை எந்திரத்தில் அரைத்தோ கொடூரமாக கொன்று குவிக்கும் வழக்கம் அண்மைக் காலமாக அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மிருக வதை தடுப்பு அமைப்பான 'பீட்டா' மாநில அரசுக்கு கடிதம் எழுதியது.
இதையடுத்து கோழிப் பண்ணைகளில் சேவல்களை கொல்வதை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

