பிரதமர்: நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது

2 mins read
5b978c81-d438-4e44-9b4a-7fc5cef57298
தாமதமாகக் கிடைத்தாலும் எனது நாடு நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. ஒட்டுமொத்த நாட்டிற்கும் நீதி கிடைத்துள்ளது என்றார் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி. படம்: ஊடகம் -

புது­டெல்லி: நிர்­பயா குற்­ற­வா­ளி­க­ளுக்கு நேற்று அதி­காலை தூக்­குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

இது பற்றி டுவிட்­ட­ரில் கருத்து தெரி­வித்த பிர­த­மர், நாட்­டில் நீதி நிலை நாட்­டப்­பட்டு உள்­ளது என்று கூறினார்.

அதே­வே­ளை­யில், "தாம­த­மா­கக் கிடைத்­தா­லும் எனது நாடு நீதி­யைப் பெற்­றுத் தந்­துள்­ளது, ஒட்­டு­மொத்த நாட்­டிற்­கும் நீதி கிடைத்­துள்­ளது," என்று நிர்­ப­யா­வின் தாயார் ஆஷா தேவி உணர்ச்சி பொங்க கூறி­னார்.

புதுடெல்­லி­யில் நிர்­பயா என்ற துணை மருத்­துவ மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்­தில் பாலி­யல் கொடு­மைக்கு ஆளா­கிக் கொல்லப்பட்டார். அந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் மொத்­தம் ஆறு பேர் கைதா­னார்­கள். அவர்­களில் ராம்­சிங் என்­ப­வர் திகார் சிறை­யில் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஒரு­வ­ருக்கு வயது குறைவு என்­ப­தால் அவருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவடைந்து அவர் விடுதலையாகிவிட்டார்.

இதர குற்­ற­வா­ளி­க­ளான முகேஷ் குமார் சிங், 32, பவன் குமார் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 27, அக்­‌ஷய் குமார், 33, ஆகிய நான்கு பேருக்­கும் மரண தண்­டனை விதித்து விசா­ரணை நீதி­மன்­றம் தீர்ப்பு அளித்­தது. அந்தத் தீர்ப்பை டெல்லி உயர் நீதி­மன்­ற­மும் உச்ச நீதி­மன்­ற­மும் பின்­னர் உறுதி செய்­தன.

மரண தண்­ட­னை­யில் இருந்து தப்­பிக்­கும் முயற்­சி­யாக குற்றவாளிகள் நால்­வரும் ஒவ்­வொ­ரு­வ­ராக மறு­ஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகி­ய­வற்றை மாறி மாறி தாக்­கல் செய்­த­னர்.

அத­னால் அவர்­க­ளைத் தூக்­கில் போடு­வது மூன்று முறை தள்­ளி­வைக்­கப்­பட்­டது. குற்­ற­வா­ளி­க­ளுக்­கான அனைத்து சட்ட வாய்ப்­பு­களும் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, நேற்று அதி­காலை 5.30 மணிக்­குத் தூக்கு தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

குற்­ற­வா­ளி­கள் தூக்­கி­லிடப்பட்­ட பிறகு டுவிட்­ட­ரில் இது பற்றி கருத்து தெரி­வித்த பிர­த­மர் மோடி, பெண்­க­ளின் கவு­ர­வத்­தை­யும் பாது­காப்­பை­யும் உறுதி செய்­வ­தில் இந்தத் தண்­டனை மிக முக்­கி­ய­மா­னது என்று குறிப்­பிட்­டார்.

"இந்­தத் தீர்ப்பு நீதியை நிலை நாட்டி இருக்­கிறது. நமது சக்தி ஒவ்­வொரு துறை­யி­லும் சிறந்து விளங்­கு­கிறது. பெண்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளித்து அவர்­கள் மேம்­பாட்­டில் கவ­னம் செலுத்­தும் ஒரு நாட்டை நாம் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டும். அத்­த­கைய ஒரு நாட்­டில் சமத்­து­வம், சரி­சம வாய்ப்­பு­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­படும்," என்­றும் திரு மோடி கூறி­னார்.

அதே­போல் நிர்­ப­யா­வின் தாயா­ரும் குற்­ற­வா­ளி­கள் தூக்­கி­லி­டப்­பட்­டதை மிக­வும் வர­வேற்­றார்.

குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தூக்­குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து திகார் சிறை ­வெ­ளியே இனிப்­பு­கள் வழங்கி மக்கள் கொண்­டா­டி­னர்.

தேசி­யக் கொடி­யு­டன் வந்­தி­ருந்த சமூக ஆர்­வ­லர்­கள், இந்தியாவுக்கு வெற்றி எனக் குரல் எழுப்­பி உற்­சா­க­மாக மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னர்.

இத­னி­டையே, போலிஸ் மற்­றும் சட்­டத்­தில் உள்ள ஓட்­டை­கள் கார­ண­மா­கவே நிர்­பயா வழக்­கில் நீதி கிடைக்க 7 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது என்று டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் கருத்து கூறி­னார். இவ்­வே­ளை­யில் தூக்­கி­லி­டப்­பட்ட குற்­ற­வா­ளி­க­ளின் உடல்­கள் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அவர்­க­ளின் குடும்­பத்­தா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.