மும்பை: யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்பில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியை அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரித்தது.
யெஸ் வங்கியின் வராக்கடன் அதிகரித்ததால் அது நொடித்துப் போகும் நிலைக்குச் சென்றது. அது இப்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த வங்கியில் பிரபல தொழிலதிபரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியின் 9 நிறுவனங்கள் ரூ.12,800 கோடி கடன் வாங்கியுள்ளன. அவை திருப்பிச் செலுத்தப்படவில்லை.
இந்நிலையில், அனில் அம்பானியை நேரே வரவழைத்து அமலாக்கத்துறை விசாரித்தது.
இதேபோல், எஸ்செல் குழுமத் தலைவர் சுபாஷ் சந்திரா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் உட்பட பலருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பி இருந்தது. ஆனால், அவர்கள் பல காரணங்களைக் கூறி விசார ணைக்கு வரவில்லை.

