அலட்­சி­ய­மாக நடந்­து­கொண்ட இந்தி பாடகி மீது போலி­சார் வழக்கு

அலட்­சி­ய­மாக நடந்­து­கொண்ட இந்தி பாடகி மீது போலி­சார் வழக்கு

1 mins read
a3664f4f-de63-40e0-a258-e34d7bc4706a
இந்தித் திரைப்பட பின்­ன­ணிப் பாடகி கனிகா கபூர் படம்: ஊடகம் -

மும்பை: பிர­பல பின்­ன­ணிப் பாடகி கனிகா கபூர் (படம்) சில நாட்­க­ளுக்கு முன் லண்­டன் சென்­று­விட்டு இம்­மா­தம் 15ஆம் தேதி லக்­னோ­வுக்கு வந்­தார். கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இருந்­த­தால் அவரை 15 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளச் சொல்லி அறி­வு­றுத்­தப்­பட்­டது.

ஆனால் அதை மதிக்­கா­மல் லக்­னோ­வில் உள்ள ஒரு பிர­பல ஹோட்­ட­லில் நடந்த விழா­வில் ராஜஸ்­தான் மாநில முன்­னாள் முதல்­வர் வசுந்­தரா ராஜே மற்­றும் அவர் மக­னும் நாடா­ளு­மன்ற எம்­பி­யு­மான துஷ்­யந்த் உள்­ளிட்­டோ­ரு­டன் கலந்­து­கொண்­டார்.

தற்­போது கனி­கா­வுக்கு கொரோனா பாதிப்பு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளதை அடுத்து வசுந்­த­ரா­ராஜே, அவ­ரது மகன் ஆகிய இரு­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். மேலும் விழா­வில் கலந்­து­கொண்ட துஷ்­யந்த் சிங் நாடா­ளு­மன்­றத்­துக்­குச் சென்று வந்­த­தா­லும் அதி­பர் ராம்­நாத் கோவிந்த் ஏற்­பாடு செய்த விருந்­தில் கலந்­து­கொண்­ட­தா­லும் இந்த விவ­கா­ரம் மேலும் சிக்­க­லா­கி­யுள்­ளது. இத­னால் தொற்­று­நோய் பரவ வாய்ப்­பு­கள் ஏற்­படும் வகை­யில் கவ­னக்­கு­றை­வாக இருத்­தல் உள்­ளிட்ட 3 பிரி­வின்­கீழ் போலி­சார் பாடகி கனிகா கபூர் மீது வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.