300ஐ நெருங்­கும் கிரு­மித்­தொற்று; நாடு முழு­வ­தும் விழிப்­பு­நிலை

300ஐ நெருங்­கும் கிரு­மித்­தொற்று; நாடு முழு­வ­தும் விழிப்­பு­நிலை

2 mins read
7658f67a-62e2-4bf2-a5e5-02289e5a3d68
இன்று சுய ஊர­டங்கு கடைப்பிடிக்கப்படுவதால் மும்பை ரயில்நிலை­யத்­தில் வெளி மாநி­லத்­த­வர் கூட்­டம் அலை­மோ­தி­யது. ரயி­லுக்­குள் இடம்­ பி­டிக்க நேற்று சன்னல் வழியாக நுழைந்த ஒருவர். படம்: ராய்ட்­டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 283ஆக உயா்ந்­துள்­ளது.

ஓர் இத்­தா­லி­யர், மூன்று இந்­தி­யர் என இது­வரை நான்கு பேர் கிரு­மித்­தொற்­றால் மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர். பாதிக்­கப்­பட்­டோ­ரில் 23 பேர் முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­னர். அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரத்­தில் 52 பேரும் கேர­ளத்­தில் 40 பேரும் தமி­ழ­கத்­தில் 3 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது நேற்று பிற்­ப­கல் நில­வ­ரம்.

கொரோனா தாக்­கு­த­லில் இந்­தியா தற்­போது 2வது நிலை­யில் உள்­ளது. 3வது நிலை­யான சமூக பர­வல் நிலைக்கு செல்­லா­மல் தடுக்க தேவை­யான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் நிலை­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளை­யும் அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­க­ளை­யும் தனி­மைப்­ப­டுத்­தி­யும் தொடர்ந்து கண்­கா­ணித்­தும் சிகிச்சை அளிக்க சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­னர்.

நாடு முழு­வ­தும் உள்ள அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் மருத்­து­வக் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கும் மத்­திய அரசு சில அறி­வு­ரை­களை வழங்கி உள்­ளது.

கொரோனா கிரு­மியை எதிர்­கொள்­ள­வும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­க­வும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை விரைந்து செய்­யு­மாறு அர­சுத்­த­ரப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

மருத்­து­வ­ம­னை­களில் போதிய படுக்கை வச­தி­கள் செய்­ய­வும் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­க­வும் தேவை­யான அள­வுக்கு வென்­டி­லேட்­டர்­கள் வைக்­க­வும் பிரா­ண­வாயு மற்­றும் முகக்­க­வ­சங்­களை தயா­ராக வைக்­கு­மாறும் கூறப்­பட்­டுள்­ளது.

மேலும், அனைத்து மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் கூடு­தல் ஊழி­யர்­களை பணி­யில் அமர்த்தி தாக்­கு­தலை எதிர்­கொள்ள தயார்­நி­லை­யில் இருக்­கு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன் ஒரு பகு­தி­யாக எல்லா அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­காக படுக்கை வச­தி­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. அதன்­படி நாடு முழு­வ­தும் கொரோ­னா­வில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­கா­கவே 60 ஆயி­ரம் படுக்­கை­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. அத்­து­டன் வென்­டி­லேட்­டர் எண்­ணிக்­கையை 2½ மடங்கு அதி­க­மாக வைக்­க­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.