சுய ஊரடங்கு: மீறியவர்களை ரோஜாப்பூ கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய போலிசார்

சுய ஊரடங்கு: மீறியவர்களை ரோஜாப்பூ கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய போலிசார்

1 mins read
28907e6b-39d2-41d8-96b1-05ad6397617a
சுய ஊர­டங்கு உத்­த­ரவை மீறி வெளியே சுற்­றித் திரிந்­த­வர்­க­ளுக்கு டெல்லி போலி­சார் ரோஜாப்­பூக்­க­ளைக் கொடுத்து அறி­வுரை கூறி­னர். படம்: ஊடகம் -

புது­டெல்லி: சுய ஊர­டங்கு உத்­த­ரவை மீறி வெளியே சுற்­றித் திரிந்­த­வர்­க­ளுக்கு டெல்லி போலி­சார் ரோஜாப்­பூக்­க­ளைக் கொடுத்து அறி­வுரை கூறி­னர்.

கொரோனா கிரு­மித் தொற்று பர­வ­லைத் தடுப்­ப­தற்கு மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது. காவல்­து­றை­யி­னர், அரசு அதி­கா­ரி­கள், மரு­த்­து­வர்­கள் உள்­ளிட்­டோர் அர­சின் இம்­மு­யற்­சிக்கு பக்­க­ப­ல­மாக இருந்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் நேற்று ஒரு­நாள் நாடு முழு­வ­தும் 'மக்­கள் ஊர­டங்கு' கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. கொரோனா கிருமி பாதிப்­பி­லி­ருந்து நாட்­டைக் காப்­ப­தற்­கான சோதனை முயற்சி இது என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­தி­ருந்­தார்.

'மக்­கள் ஊட­ரங்கு' கார­ண­மாக நாடு முழு­வ­தும் ரயில், மற்­றும் வாக­னப் போக்­கு­வ­ரத்து முற்­றி­லும் நிறுத்­தப்­பட்­ட­தால், பெரும்­பா­லான நக­ரங்­கள் வெறிச்­சோ­டிக் காணப்­பட்­டன. அதே­வே­ளை­யில் சில இடங்­களில் பொது­மக்­கள் இந்த சுய ஊர­டங்­கை­யும் மீறி வெளியே நட­மா­டி­னர்.

இத்­த­கைய நபர்­க­ளி­டம் கடுமை காட்­டா­மல் வீட்­டுக்­குச் செல்­லுங்­கள் என்று போலி­சார் அறி­வு­றுத்­தி­னர். டெல்­லி­யில் மக்­கள் ஊர­டங்கு உத்­த­ரவை மீறி வெளியே நட­மா­டி­ய­வர்­க­ளி­டம் போலி­சார் ரோஜாப்பூ கொடுத்து வீட்­டிற்­குச் செல்­லு­மாறு அன்­பு­டன் கேட்­டுக்­கொண்­ட­னர்.

போலி­சா­ரின் இந்­தச் செயல்­பாட்­டுக்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர். இது தொடர்­பான புகைப்­ப­டங்­களும் காணொ­ளிப் பதி­வு­களும் இணை­யத்­தில் வைர­லா­கின.