புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவையை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று அங்கு சுய ஊரடங்கு உத்தரவு கடைப் பிடிக்கப்பட்டது.
ஏற்கெனவே அனைத்துலக விமானங்கள் இந்தியாவில் மார்ச் 22 முதல் 29 வரை தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு ரயில்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்தாகி வந்தன.
இந்நிலையில் ஒட்டுமொத்த ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

