மூன்று முறை தள்ளிப்போன திருமணம்

1 mins read
d350c36d-0a79-4663-b276-a47bdb6512e4
பிரேம்சந்திரன், சான்டிரா. படம்: ஊடகம் -

திருவனந்தபுரம்: நிபா கிருமித் தாக்குதல், வெள்ளம் மற்றும் கொரோனா கிருமித் தொற்று ஆகிய பாதிப்புகளால் கேரளாவைச் சேர்ந்த பிரேம்சந்திரன் (26 வயது) மற்றும் சான்டிரா (23 வயது) ஆகிய இருவரின் திருமணம் மூன்று முறை தடைபட்டுள்ளது.

கடந்த 2018 மே மாதம் நிபா கிருமித் தொற்றால் கேரளாவில் 17 பேர் பலியானதால் இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

2019 ஆகஸ்டில் கேரளாவில் பெரு வெள்ளம் ஏற்பட்டதால் திருமணம் தடைபட்டது. இப்போது மார்ச் மாதம் நடைபெற இருந்த திருமணம் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.