புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு

1 mins read
ac97284b-2f9e-49b9-80fd-81957dd4e984
புதுச்சேரியில் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. படம்: இபிஎஸ் -

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். "போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. மார்ச் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.