கௌஹாத்தி: அசாமுக்குள் நுழையும் வெளி மாநிலத்தவருக்கு முத்திரை குத்தப்பட்டு, 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அசாம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை கொரோனா கிருமித் தொற்று ஏற்படவில்லை. இதையடுத்து அசாம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்படுபவர்களை மற்றவர்கள் அடையாளம் கண்டு விலகி இருக்க ஏதுவாக 'கொரோனா கண்காணிப்பில் இருப்பவர்' என்ற முத்திரை கையில் குத்தப்பட்டது.
அசாமில் வெளி மாநிலத்தவருக்கு முத்திரை குத்தப்படும்
1 mins read

