புதுடெல்லி: கொரோனா கிருமிக்கு எதிராகப் போராடும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் நேற்று முன்தினம் நன்றி தெரிவித்தனர். இதற்காக அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அனைவரும் தங்கள் வீட்டுக்கு வெளியே வந்து நின்று, சுமார் ஐந்து நிமிடங்கள் கைதட்டியும் மணியடித்தும் நன்றியை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் தட்டு, கரண்டிகளைக் கொண்டு ஒலியெழுப்பினர். கொரானாவுக்கு எதிரான போரில் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று பலரும் தங்கள் வீட்டு வாசல்களிலும் பால்கனியிலும் நின்று பலமாக கைதட்டி நன்றியைத் தெரிவித்தனர்.
கைதட்டி நன்றி தெரிவித்த பொது மக்கள்
1 mins read
-

