நாடு முழுவதும் 415 பேருக்கு கிருமித் தொற்று

நாடு முழுவதும் 415 பேருக்கு கிருமித் தொற்று

1 mins read
b2d17d41-e78f-4558-a2a9-bf6c370333cf
இந்­தி­யா­வில் நாளுக்கு நாள் கொரோனா கிரு­மித் தொற்று வேக­மா­கப் பரவி வரும் நிலை­யில் அத­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 415 ஆக உயர்ந்­துள்­ளது. படம்: ஊடகம் -

மும்பை: இந்­தி­யா­வில் நாளுக்கு நாள் கொரோனா கிரு­மித் தொற்று வேக­மா­கப் பரவி வரும் நிலை­யில் அத­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 415 ஆக உயர்ந்­துள்­ளது.

கொவிட்-19 நோயால் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 8ஆக அதி­க­ரித்­துள்­ளது என மத்­திய சுகா­தா­ரத்­துறை அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் இந்­தியா வந்த வெளி­நாட்­ட­வர்­கள் மூலம் பரவுகிறதா என தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­கிறது.

மும்பை கல்­யாணி பகு­தி­யில் அமெ­ரிக்­கா­வில் இருந்து வந்தவர், தமக்கு கிரு­மித் தொற்று இருப்­பது தெரி­யா­ம­லேயே சுமார் ஆயி­ரம் பேரு­டன் தொடர்­பில் இருந்­தி­ருக்­கி­றார்.

அவர் ரயி­லில் பய­ணம் மேற்­கொண்­ட­து­டன் திரு­ம­ணம் ஒன்­றி­லும் பங்­கேற்­றுள்­ளார். அவ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­க­ளுக்கு பரி­சோ­தனை செய்­யப்­பட்டு வரு­கிறது.

மகா­ராஷ்­டிரா மாநி­லம் தான் கொரோனா கிரு­மித் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு இது­வரை மூன்று பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

பிலிப்­பைன்ஸ் நாட்­டைச் சேர்ந்த முதி­ய­வர் ஒரு­வர் கிருமி பாதிப்பில் இருந்து மீண்ட நிலை­யில் திடீர் உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­பட்டு உயி­ரி­ழந்­துள்­ளார்.

இந்­தி­யா­வில் கொரோனா கிருமி தொற்­றுக்கு பலி­யான முதல் வெளி­நாட்­ட­வர் இவர்.

டெல்லியில் 30 பேருக்கும் கேரளாவில் 67 பேருக்கும் ராஜஸ்தானில் 28 பேருக்கும் கிருமி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 9 பேர், பீகாரில் 2 பேர், அரியானாவில் 7 பேர், இமாசலப்பிரதேசத்தில் 2 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.