பார்கவா: பாதிக்கப்பட்ட 80% மக்கள் தாமாகவே குணமடைவர்

1 mins read
ff415aaa-07ef-4176-a104-dc6912aa891f
-

புதுடெல்லி: கொரோனா கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர் தாமாகவே குணமாவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மன்றத்தின் இயக்குநர் பலராம் பார்கவா, பாதிக்கப்பட்ட எல்லோரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.

"தினந்தோறும் 10 ஆயிரம் பரிசோதனைகளை நடத்தும் திறன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்துக்கு உண்டு. கிருமி சங்கிலியைத் தடுக்க மக்கள் ஒருவரை ஒருவர் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். கொரோனா கிருமி காற்றில் பரவாது," என்று பார்கவா தெரிவித்தார்.