தனிமைப்படுத்தப்படும் 23 மாநிலங்களை சேர்ந்த 80 மாவட்டங்கள்: மத்திய அரசு அறிவுறுத்து

தனிமைப்படுத்தப்படும் 23 மாநிலங்களை சேர்ந்த 80 மாவட்டங்கள்: மத்திய அரசு அறிவுறுத்து

2 mins read
97941b91-7ad2-46de-8a65-1c34ef7edcc8
-

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 400ஐ கடந்­துள்ள நிலை­யில், நாடு முழு­வ­தும் 23 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 80 மாவட்­டங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வது என மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வலை தடுக்­கும் வகை­யில் இம்­மா­வட்­டங்­களில் அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளுக்கு மட்­டும் தடை­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­படும். புது­டெல்­லி­யில் பிர­த­ம­ரின் முதன்­மைச் செய­லர், மத்­திய அமைச்­ச­ரவை செய­லர் மற்­றும் மாநில தலை­மைச் செய­லர்­கள் பங்­கேற்ற உயர்­மட்­ட குழு கூட்­டத்­தில் இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­டது.

இதற்­கான உரிய உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பிக்­கு­மாறு மாநில தலை­மைச் செய­லர்­க­ளுக்கு மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது. மாநி­லங்­க­ளுக்கு இடை­யே­யான பேருந்து போக்­கு­வ­ரத்தை 31ஆம் தேதி வரை முற்­றி­லு­மாக நிறுத்­து­வது குறித்­தும் இந்­தக் கூட்­டத்­தில் ஆலோ­சிக்­கப்­பட்­ட­தாக தெரி­கிறது. மத்­திய அர­சின் இந்த அறிவுறுத்­த­லை ஏற்று தமி­ழக முதல்­வர் பழ­னி­சாமி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேர­ளா­வில் திரு­வ­னந்­த­பு­ரம், ஆலப்­புழா, எர்­ணா­கு­ளம், இடுக்கி, கண்­ணூர், காசர்­கோடு, கோட்­ட­யம், மலப்­பு­ரம், பத்­த­னம்­திட்டா, திருச்­சூர் ஆகிய 10 மாவட்­டங்­களும் ஆந்­தி­ரா­வில் பிர­கா­சம், விஜ­ய­வாடா, விசா­கப்­பட்­டி­னம் ஆகிய 3 மாவட்­டங்­களும் தெலுங்­கா­னா­வில் ஹைத­ரா­பாத், பத்­ராத்ரி கொத்­த­கூ­டம், மெட்­சாய், ரெங்­கா­ரெட்டி, சங்­கா­ரெட்டி ஆகிய 5 மாவட்­டங்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன. டெல்­லி­யும் தனி­மைப்படுத்தப்படுவ­தாக அம்­மா­நில முதல்­வர் கெஜ்­ரி­வால் அறி­வித்­துள்­ளார்.

மத்­திய அர­சின் அறி­வு­றுத்­தலை ஏற்று பீகார், கர்­நா­டகா உள்­ளிட்ட மாநி­லங்­களும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன. பொது மக்கள் அடுத்த இரு வாரங்களுக்கு அரசாங்கம் வெளியிடும் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும், அதன் மூலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே அனைத்து மாநில முதல்வர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.