நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக அரசு வெற்றி

1 mins read
b0159b70-d286-494e-8d13-dd0062aa24b7
கமல்நாத் அரசு கவிழ காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுடன் புதிய முதல்வர் சவுகான். படம்: இந்திய ஊடகம் -

போபால்: மத்­திய பிர­தே­சத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் 22 எம்­எல்­ஏக்­கள் பதவி விலகியதால் செய்­த­தால் கமல்­நாத் தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் அரசு பெரும்­பான்­மையை இழந்­தது.

நம்­பிக்கை வாக்­கெ­டுப்பை எதிர்­கொள்ள முடி­யாத நிலை­யில், முதல்­வர் பத­வி­யி­லி­ருந்து கமல்­நாத் வில­கி­னார். இத­னை­ய­டுத்து ஆட்­சி­ய­மைக்­கும் முயற்­சி­யில் பாஜக இறங்­கி­யது.

பாஜ­க­வின் சட்­ட­மன்றக் குழு கூட்­டத்­தில் சட்­ட­மன்ற கட்­சித் தலை­வ­ராக சிவ­ராஜ் சிங் சவு­கான் தேர்வு செய்­யப்­பட்­டார். இத­னை­ய­டுத்து அவர் நேற்று முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றார். அவ­ருக்கு ஆளு­நர் லால்ஜி டாண்­டன் பத­விப் பிர­மா­ணம் மற்­றும் ரக­சிய காப்பு பிர­மா­ணம் செய்து வைத்­தார். இதன்­மூ­லம் 4வது முறை­யாக மத்­திய பிர­தேச முதல்வராக அவர் பொறுப்­பேற்­றுக்­கொண்­டார்.

இந்­நி­லை­யில், மத்­திய பிர­தேச சட்­ட­மன்­றம் நேற்று கூடி­யது. இக்­கூட்­டத்­தில் சிவ­ராஜ் சிங் சவு­கான் தனது அர­சுக்­கான பெரும்­பான்­மையை நிரூ­பித்­தார்.

நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் கலந்­து­கொள்­ளா­மல் காங்­கி­ரஸ் எம்­எல்­ஏக்­கள் புறக்­க­ணித்­த­னர். சமாஜ்­வாடி, பகு­ஜன் சமாஜ் மற்­றும் சுயேச்சை எம்­எல்­ஏக்­களும் சிவ­ராஜ் சிங்­கிற்கு ஆத­ர­வ­ளித்­த­னர். இதை­ய­டுத்து சிவ­ராஜ் சிங் சவு­கான் நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெற்­றார்.