வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை

வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை

2 mins read
2b903c0a-0621-4602-8cf2-d6f5dab8bda2
-

புதுச்­சேரி: ஊர­டங்கு உத்­த­ரவை மீறி பொது­மக்­கள் வீட்­டை­விட்டு வெளியே வந்­தால் அவர்­க­ளுக்கு ஓராண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் என்று புதுச்­சேரி முதல்­வர் நாரா­ய­ண­சாமி எச்­ச­ரித்­துள்­ளார்.

கொரோனா கிருமி தடுப்பு நட­வ­டிக்கை தொடர்­பாக முதல்­வர் நாரா­ய­ண­சாமி தலை­மை­யில் அமைச்­சர்­கள் அனைத்து கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆலோ­சனை கூட்­டம் சட்­ட­மன்ற வளா­கத்­தில் நேற்று நடை­பெற்­றது.

அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "ஊர­டங்கு உத்­த­ர­வால் மக்­கள் யாரும் வெளியே வர­வேண்­டாம் என்று கூறி­யும் பொது­மக்­கள் அலட்­சி­ய­மாக உ‌ள்­ள­ன‌ர். அவர்­கள் தங்­க­ளது உயி­ரைப் பற்றி கவ­லைப்­ப­ட­வில்லை. தடைச் சட்­டத்தை மீறு­ப­வர்­க­ளுக்கு ஓராண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும்.

"தடையை மீறி தனி­யார் நிறு­வ­னங்­கள் திறந்­தால் 'சீல்' வைக்­கப்­படும். பால் மற்­றும் மருந்­து­க­டை­களை தவிர மற்ற கடை­கள் மூடப்­படும். மீறி­னால் கைது செய்­யப்­ப­டு­வார்­கள்.

"புதுச்­சேரி மக்­கள் வீட்­டி­லி­ருந்து வெளியே வரா­மல் தடுப்­ப­தற்கு, தேவைப்­பட்­டால் துணை ராணு­வப் படை உதவி கோரப்­படும்," என்று முதல்­வர் நாரா­ய­ண­சாமி தெரி­வித்­தார்.

புதுச்­சே­ரி­யில் திங்­கட்­கி­ழமை இரவு 9 மணி முதல் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மா­தம் இறுதி வரை ஊர­டங்கு அம­லில் இருக்­கும் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இதன் கார­ண­மாக எல்­லை­கள் அனைத்­தும் மூடப்­பட்­டுள்­ளன. கட­லூர், விழுப்­பு­ரம், திண்­டி­வ­னம், மரக்­கா­ணம் ஆகிய எல்­லை­கள் அனைத்­தும் மூடப்­பட்­டுள்­ளன.

இதன் வழி­யாக வரும் எந்த வெளி­யூர் வாக­னங்­களும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. அவை திருப்பி அனுப்­பப்­ப­டு­கின்­றன.

இருந்­த­போ­தி­லும் நக­ர பகு­தி­யில் பொது­மக்­கள் இருசக்கர வாக­னங்­களில் ஆங்­காங்கே சுற்­று­கின்­ற­னர். அவர்­களை போலி­சார் விரட்டி விரட்டி பிடித்து விசா­ரிக்­கின்­ற­னர்.