ஹைதராபாத்: கொரோனா குறித்த எந்தவித அச்சமும் இன்றி, ஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக நடந்துகொள்பவர் களைக் கண்டதும் சுட்டுத் தள்ளு வதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார். இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்கள் கொரோனா ஆபத்தை உணராமல் வெளியே திரிகிறார்கள். தொடர்ந்து இனியும் இதுபோல் வெளியே திரிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் ராணுவத்தை அழைத்துச் சுடவும் தயங்கமாட்டோம். அவரவரும் அவரவரது வீட்டிலேயே இருப்பதுதான் வீட்டிற்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது. "பல்வேறு பகுதிகளிலும் இந்த கிருமியின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஊரடங்கு உத்தரவு அர்த்தமற்றதாக மாறிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. தேவையின்றி நடமாடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக் கும் நிலைமையை மக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது," என்று ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
'வெளியே வந்தால் சுட்டுத் தள்ளுேவாம்'
1 mins read
-

