ஊழியர்களுக்கு தலா ரூ.5,000

ஊழியர்களுக்கு தலா ரூ.5,000

1 mins read
ca89459d-cf55-4f63-8bda-69fd13d5d92f
-

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் உணவு சமைக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு நேரடியாகக் கொண்டு வந்து வழங்கப்பட்டு வரும் நிலையில், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

காணொளி மூலம் கெஜ்ரிவால் கூறுகையில், "தலைநகர் டெல்லியில் கடந்த 40 மணிநேரத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பதாக புதிதாக யாருக்கும் கண்டறியப்படவில்லை. 30 பேரில் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் பலியாகி யுள்ளார். மற்றவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தப் போராட்டம் மிக நீண்டது. எந்த நேரத்திலும் பாதித்தோரின் எண்ணிக்கை கூடலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்," என்றார்.