கைகழுவும் திரவம், சுவாசக் கருவிகள் ஏற்றுமதிக்கு தடை

1 mins read
ec9482de-3d6a-40c4-ac8f-687da73d3c09
-

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமி பரவலைத் தடுக்கவும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் முழு முனைப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தக் கிருமி பரவுவதைத் தடுக்கும் வகையில் 'சானிடைசர்' என்று அழைக்கப்படுகிற மது கலந்த திரவத்தை பயன்படுத்தி பொதுமக்கள் அடிக்கடி கை கழுவ ஊக்குவிக்கப்படுகிறது. இந்த கை கழுவும் திரவத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வகையில் அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோல் அனைத்துவிதமான சுவாசக் கருவிகளை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.