கொரோனா கிருமித் தொற்றால் 649 பேர் பாதிப்பு; 13 பேர் பலி

கொரோனா கிருமித் தொற்றால் 649 பேர் பாதிப்பு; 13 பேர் பலி

2 mins read
fc3619e3-93be-4738-b020-78d90a4e934a
நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானாவில் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: கொரோனா கிரு­மி­யின் தாக்­கத்­தால் உல­கெங்­கும் உள்ள மக்­கள் பயத்­தில் உறைந்து போயுள்ள நிலை­யில், இந்­தி­யா­வி­லும் இந்தக் கிரு­மி­யின் தாக்­கம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

நாட்­டில் இது­வரை கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை 649 பேராக அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் இவர்­களில் 42 பேர் குண­ம­டைந்துவிட்­ட­தா­க­வும் மத்­திய சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக இத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "இந்­தி­யா­வில் கொரோனா கிருமி யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 649 பேராக அதி­க­ரித்­துள்­ளது. உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 10ல் இருந்து 13ஆக அதி­க­ரித்­துள்­ளது," என்று தெரி­விக்கப்பட்டுள்ளது.

இந்­நி­லை­யில், ஜம்மு-காஷ்­மீ­ரில் கொரோனா கிரு­மி­யின் பாதிப்­பால் முதல் உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்கின்­றன.

ஸ்ரீந­கர் இத­ய­நோய் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த 65 வயது ஆட­வர் நேற்று உயி­ரி­ழந்­தார். ஏற்­கெ­னவே அவர் உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு, உடல் பரு­மன் ஆகிய பிரச்­சி­னை­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் குறிப்­பி­டப்பட்­டுள்­ளது.

இந்தக் கிருமித் தொற்றால் அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 124 பேரும் கேர­ளா­வில் 118 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கேர­ளா­வில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்­ள­தாக அம்­மா­நில முதல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்­துள்­ளார்.

அவர்­கள் இங்­கி­லாந்து, பிரான்ஸ் உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் இருந்து கேர­ளா­வுக்கு வந்­த­வர்­கள் என்­றும் இவர்­க­ளை­யும் சேர்த்து கேர­ளா­வில் 118 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர்­களில் 6 பேர் குண­மடைந்­துள்­ள­தா­க­வும் பின­ராயி விஜயன் கூறி­னார்.

இதற்­கி­டையே மும்­பை­யில் கடந்த 24ஆம் தேதி உயி­ரி­ழந்­த­வர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. இதை­ய­டுத்து, மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் மட்டும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.