மருத்துவருக்கு கிருமித் தொற்று; 800 பேர் தனிமை

மருத்துவருக்கு கிருமித் தொற்று; 800 பேர் தனிமை

1 mins read
36439a69-3096-43a6-95aa-1e4df5d396c0
புதுடெல்லியில் பணிபுரியும் புறநகர்ப்பகுதியில் வசிப்பவர்கள், பொதுப்போக்குவரத்து முடங்கியதால் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

வடகிழக்கு டெல்லி மஜ்பூரில் ஏழை எளிய மக்க ளுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் சமுதாய மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மருத்துவரின் மனைவி, மகளுக்கும் இந்த தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்களும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, மார்ச் 12 முதல் 18 வரை மருத்துவருடன் தொடர்பில் இருந்த சுமார் 800 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவ தாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.