கோல்கத்தா: தொழிலதிபர் ஒருவர் தனது 30 பங்களாக்களை கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் வர்தன் நியோடியா (படம்), "தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தன்னு டைய 30 பங்களாக்களை கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சிகிச்சை வசதிக்காக அர சாங்கம் பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று கூறியுள்ளார். அங்கு தூய்மைப் பணிகளையும் உணவு வசதி களையும் தான் வழங்குவதாக வும் அவர் அறிவித்துள்ளார். இதை மாநில அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

