புதுடெல்லி: உலகில் கொரோனா கிருமித்தோற்று தலைவிரித்து ஆடும் நிலையில், பொதுமக்கள் கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும், பல நாடுகளில் கை சுத்தத்தைப் பொறுத்தவரை மக்கள் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர் என்பது பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஓர் ஆய்வு மூலம் தெரிகிறது.
கை கழுவுவதில் சவூதி அரேபிய மக்கள்தான் (97%) முதலிடத்தில் உள்ளனர். அடுத்தடுத்த நிலையில் போஸ்னியா, அல்ஜீரியா, லெபனான், பாப்புவா நியூ கினியா ஆகிய நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
கழிவறைக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்தால் கை கழுவ வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் 50% மக்கள் இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
இந்தப் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா, ஜப்பான், தென் கொரியா, நெதர்லாந்து, தாய்லாந்து, கென்யா, இத்தாலி, மலேசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பங்ளாதேஷ் நாடுகளும் இதில் மோசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் மக்களிடையே கை கழுவும் பழக்கம் மேம்பட வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

