சமூகத் தொற்றைத் தடுக்க எல்லைகள் மூடல்

சமூகத் தொற்றைத் தடுக்க எல்லைகள் மூடல்

1 mins read
9599fbac-96f7-4bf0-a960-721759ec72c5
ஜம்மு பகுதியில் எல்­லை­கள் அடைக்­கப்­பட்­டு­விட்­ட­தால் பல பகுதி­க­ளி­லும் வெளி­மா­நில ஊழி­யர்­க­ளுக்கு உணவு, இருப்­பி­டம் ஆகி­ய­வற்றை ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும் என்று மாநில மற்­றும் யூனி­யன் பிர­தேச மாநி­லங்­க­ளுக்கு மத்­திய அர­சாங்­கம் கட்­டளைப் பிறப்­பித்து இருக்­கிறது. படம்: இபிஏ-இஎஃப்இ -

புது­டெல்லி: வெளி மாநி­லங்­களில் பணி­யாற்றி வரும் தொழி­லா­ளர்­கள் ஊர­டங்கு கார­ண­மாக தங்­கள் தங்கள் மாநி­லங்­க­ளுக்­குத் திரும்­பு­வ­தால் புது­டெல்லி, மும்பை போன்ற நகர்ப் பகு­தி­களில் எங்கு பார்த்­தா­லும் பெரும் கூட்­டம் காணப்­ப­டு­கிறது.

இத­னால் கொரோனா கிரு­மித்­தொற்று சமூ­கத் தொற்­றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­டக் கூடும் என்ற அச்­சம் கிளம்பி இருக்­கிறது.

இந்­தச் சூழ­லில், வெளி மாநி­லத்­தில் பணி­யாற்றி வரும் தொழி­லா­ளர்­கள், சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பு­வ­தைத் தடுக்க அனைத்து மாநில, யூனி­யன் பிர­தேச எல்­லை­களை மூடி­விட வேண்­டும் என்று மத்­திய அர­சாங்­கம் அவ­சர உத்­த­ர­வைப் பிறப்­பித்து இருக்­கிறது.

இத­னை­ய­டுத்து புது­டெல்­லி­யில் இருந்து தொழி­லா­ளர்­கள் பல பகுதி­க­ளுக்­கும் வெளி­யே­று­வ­தைத் தடுக்க எல்­லை­கள் இழுத்து மூடப்­பட்டு இருக்­கின்­றன.

வேலை பார்க்­கும் பகு­தி­களிலேயே தங்கி இருக்­கும்­படி ஊழி­யர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறப்­பட்­டா­லும் பல­ரும் கால்­ந­டை­மூலமா­கவே தங்­கள் ஊர்­க­ளுக்­குச் சென்றுகொண்டுள்ளனர்.

அவர்­க­ளுக்கு உணவு, உறை­வி­டம் பிரச்­சினை ஏற்­பட்டு இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. எல்­லை­கள் அடைக்­கப்­பட்­டு­விட்­ட­தால் பல பகுதி­க­ளி­லும் வெளி­மா­நில ஊழி­யர்­கள் தவிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்டு உள்ள இத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு உணவு, இருப்­பி­டம் ஆகி­ய­வற்றை ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும் என்று மாநில மற்­றும் யூனி­யன் பிர­தேச மாநி­லங்­க­ளுக்கு மத்­திய அர­சாங்­கம் கட்­டளைப் பிறப்­பித்து இருக்­கிறது.

நக­ரங்­கள், நெடுஞ்­சா­லை­கள், எல்­லைப் பகு­தி­களில் மக்­கள் நட­மாட்­டமே இருக்­கக் கூடாது என்­றும் இதை போலிஸ் துறையும் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று அந்த உத்­த­ரவு குறிப்­பி­டு­கிறது.