கொரோனா: 34 பேர் பலி; 1,150 பேர் பாதிப்பு

1 mins read
9136a820-1f90-4ee0-bebd-e1552179aba2
குஜ­ராத், மேற்கு வங்­கா­ளம், மகா­ராஷ்­டிரா மாநி­லங்­களில் நேற்று கொரோ­னா­வுக்­குச் சிலர் பலி­யா­னார்­கள். இதை­ய­டுத்து இந்­தி­யா­வில் மர­ணம் 34 ஆக உயர்ந்­தது. படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: குஜ­ராத், மேற்கு வங்­கா­ளம், மகா­ராஷ்­டிரா மாநி­லங்­களில் நேற்று கொரோ­னா­வுக்­குச் சிலர் பலி­யா­னார்­கள். இதை­ய­டுத்து இந்­தி­யா­வில் மர­ணம் 34 ஆக உயர்ந்­தது. அதே­வே­ளை­யில், கிருமியால் பாதித்­துள்­ள­வர்­கள் எண்­ணிக்கை 1,150 ஆக கூடி­யது.

நாடு முழு­வ­தும் ஞாயிற்­றுக் கிழமை வரை 34,931 ரத்த மாதி­ரி­கள் கொரோனா கிரு­மித் தொற்று பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றம் தெரி­வித்­தது.

கொரோனா பாதிப்­பில் மகா ராஷ்­டிரா, கேரளா, கா்நாடகா, தெலுங்­கானா, தமி­ழ­கம் ஆகிய மாநி­லங்­கள் முன்­ன­ணி­யில் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மகா­ராஷ்­டி­ரா­வில் சாங்லி மாவட்­டம் இஸ்­லாம்­பூர் என்ற நக­ரில் வசிக்­கும் ஒரு குடும்­பத்­தைச் சேர்ந்த நால்­வர் சவுதி அரே­பியா சென்று திரும்­பி­னர். அவர்­க­ளுக்கு கொரோனா தொற்று இருப்­பது உறு­தி­யா­ன­தும் அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

பிறகு அக்­கு­டும்­பத்­தைச் சேர்ந்த ஓர் ஆண் குழந்தை உட்­பட மொத்­தம் 25 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ள­தாக தக­வல்­கள் கூறின. பல­ருக்­கும் தொற்று இருப்­பது உறு­தி­யா­ன­தால் அந்த மருத்து வம­னையே கொரோனா சிகிச்சை மைய­மா­னது.