சீனாவிலிருந்து மருத்துவ சாதனங்கள் இறக்குமதி

சீனாவிலிருந்து மருத்துவ சாதனங்கள் இறக்குமதி

2 mins read
7fad41a9-a0d3-43b4-a9f0-d156306ef3e3
பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க சீனா­வி­ட­மி­ருந்து முகக்­க­வ­சங்­க­ளை­யும் சுவா­சக் கரு­வி­க­ளை­யும் இறக்­கு­மதி செய்ய இந்­தியா திட்­ட­மிட்டு உள்­ள­தாக அர­சாங்க அதி­காரி ஒரு­வர் நேற்று ராய்ட்­டர்ஸ் செய்­தி­யி­டம் கூறி­னார். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க சீனா­வி­ட­மி­ருந்து முகக்­க­வ­சங்­க­ளை­யும் சுவா­சக் கரு­வி­க­ளை­யும் இறக்­கு­மதி செய்ய இந்­தியா திட்­ட­மிட்டு உள்­ள­தாக அர­சாங்க அதி­காரி ஒரு­வர் நேற்று ராய்ட்­டர்ஸ் செய்­தி­யி­டம் கூறி­னார்.

ஐரோப்­பிய நாடு­கள் உள்­ளிட்ட பல சீனா­வின் மருத்­துவச் சாத­னங்­க­ளின் தரம் குறித்து கேள்வி எழுப்பி இருக்­கும் நிலை­யில் இந்­தியா இத்­த­கைய முடிவை எடுத்து உள்­ளது.

திங்­கட்­கி­ழமை மாலை நில­வ­ரப்­படி இந்­தியா முழு­வ­தும் 1,251 பேருக்­குக் கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. 32 பேர் மாண்­டு­விட்­ட­னர். நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­னர்.

மேலும் அதி­க­மா­னோ­ருக்­குக் கிருமி பர­வும் நிலை உள்­ள­தால் அத­னைச் சமா­ளிக்க இப்­போ­தி­ருக்­கும் மருத்­துவ சாத­னங்­கள் போதாது. எனவே முகக்­க­வ­சம், முழு உடல் கவ­சம், சுவா­சக் கரு­வி­கள் உள்­ளிட்­ட­வற்றை உள்­நாட்­டில் அதி­க­மா­கத் தயா­ரிப்­ப­தோடு சீனா, தென்­கொ­ரியா போன்ற நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­ய­வும் மோடி அர­சாங்­கம் முடிவு செய்­துள்­ளது.

"சீனா­வி­ட­மி­ருந்து சாத­னங்­களை வாங்­கு­வது உறுதி. கார­ணம் உள்­நாட்டு தயா­ரிப்­பு­க­ளுக்கு அதிக காலம் தேவைப்­படும்," என்று இந்­திய கொள்கை விளக்க உயர் அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்­தி­யா­வுக்கு தற்­போது 38 மில்­லி­யன் (3.8 கோடி) முகக்­க­வ­சங்­களும் 6.2 மில்­லி­யன் (ஆறு லட்­சத்து 20 ஆயி­ரம்) மருத்­துவ பாது­காப்­புச் சாத­னங்­களும் தேவைப்­ப­டு­கின்­றன.

சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்த ஆயி­ரக்­க­ணக்­கான முகக்­ க­வ­சங்­களை இறக்­கு­மதி செய்த நெதர்­லாந்து அவை தர­மற்­றவை என தெரிய வந்­த­தும் மக்­க­ளி­ட­மி­ருந்து முகக்­க­வ­சங்­களை திரும்­பப் பெற்­று­விட்­டது. அதே­போல சீனா­வி­ட­மி­ருந்து வாங்­கிய மருத்­துவ சோத­னைக் கரு­வி­களில் கோளாறு இருப்­ப­தாக ஸ்பெ­யின் தெரி­வித்து உள்­ளது.

தர­மற்­றவை என்­றும் கோளா­று­கள் இருப்­ப­தா­க­வும் இது­போன்ற நாடு­கள் தெரி­வித்த புகார்­களை சீனா­வின் வெளி­யு­றவு அமைச்சு ஏற்­றுக்­கொண்டு உள்­ளது. அவற்­றில் சில பிரச்­சி­னை­கள் இருக்­க­லாம் என்­றது அது.

"இதர நாடு­க­ளின் மக்­க­ளைப் பாது­காக்க உத­வும் நோக்­கில் சீனா­வின் மருத்­துவ சாத­னத் தயா­ரிப்­பா­ளர்­கள் இரவு பக­லாக வேலை செய்­கி­றார்­கள்.

"எங்­க­ளது உத­வும் நோக்­க­மும் அக்­க­றை­யும் நியா­ய­மா­னவை. குறை­கள் கண்­ட­றி­யப்­பட்­டால் அவற்றை சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளி­டம் எடுத்­துக்­கூறி சரி செய்­யு­மாறு கோரு­வோம்," என்று சீன வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் ஹுவா சுன்­யிங் திங்­கட்

­கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.