கறுப்புப் பட்டியலில் 300 வெளிநாட்டினர்

புது­டெல்லி: டெல்­லி­யின் நிஜா­மு­தீன் பகுதி புதிய கிரு­மித்­தொற்று மைய­மாக உரு­வெ­டுத்து உள்­ளது. இங்கு உள்ள சமய மாநாட்­டில் பங்­கேற்­ற­வர்­களில் பத்து பேர் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக உயி­ரி­ழந்­து­விட்­ட­தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்டு உள்­ளது.

தெற்கு டெல்­லி­யின் நிஜா­மு­தீன் பகு­தி­யில் உள்ள தப்­லிகி ஜமாத்­தின் தலை­மை­ய­க­மான அலமி மார்க்­காஸ் பங்­க­ளே­வாலி மஸ்­ஜித்­தில் நடந்த மாநாட்­டில் இந்த மாத தொடக்­கத்­தில் நாடு முழு­வ­தும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்துகொண்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இவர்க ளில் 300க்கும் மேற்­பட்டோர் வெளிநாட்­டுப் பிர­தி­நி­தி­கள்.

மாநாட்­டில் பங்­கேற்­றுச் சென்­ற­வர்­களில் நேற்று பிற்­ப­கல் வரை 10 பேர் மாண்­டு­விட்­ட­னர். 24 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 200க்கும் மேற்­பட்­டோர் கிரு­மித்­தொற்று அறி­கு­றி­கு­றி­க­ளு­டன் டெல்­லி­யில் பல்­வேறு மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த சமய போத­கர்­கள் மாநாட்­டுக்­குப் பின்­னர் தெலுங்­கானா, பீகார், உத்­த­ரப் பிர­தே­சம், ஆந்­திரா, ஒடிசா ஆகிய மாநி­லங்­க­ளுக்­குச் சென்று பள்­ளி­வா­சல்­களில் பல கூட்­டங்­களை நடத்தி உள்­ள­னர். இதைத்தொடர்ந்து தப்­லிக் ஜமாத் மவு­லானா மர்­காஸ் நிஜா­மு­தீன் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் மவு­லானா மர்­காஸ் நிஜா­மு­தீன் விளக்­கம் அளித்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார். “நிஜா­மு­தீன் பகு­தி­யில் இருக்­கும் தப்­லிக் ஜமாத் கடந்த 100 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக அர­சின் சட்­டங்­க­ளுக்கு உட்­பட்டு செயல்­பட்டு வரு­கிறது. நாங்­கள் இந்த மாநாடு நடத்­தி­ய­தி­லும் மக்­க­ளைத் தங்­க­வைத்­த­தி­லும் சட்­டத்தை மீற­வில்லை,” என்று அவர் கூறி­யுள்­ளார்.

மேலும், கொரோனா கிரு­மித்­தொற்­றைத் தடுக்க விதிக்­கப்­பட்ட ஊர­டங்கு உத்­த­ர­வின்­போது விசா விதி­களை மீறி­ய­தற்­காக 300 வெளி­நாட்டு சமய போத­கர்­களை கறுப்­புப்­பட்­டி­ய­லில் வைக்க மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் முடிவு செய்­துள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

இவர்­கள் மலே­சியா, இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து, சவூதி அரே­பியா உள்­ளிட்ட 16 நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

சுற்­றுலா விசா­வில் வந்த இவர்­கள் அனை­வ­ரும் விதி­களை மீறி சமய மாநாட்­டில் பங்­கேற்­ற­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். இந்­தியா முழு­வ­தும் கிரு­மித்­தொற்று பரவ இந்த மாநாடு பேரா­பத்தை உரு­வாக்கி இருப்­ப­தா­க­வும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!