ஆதரவற்றோர் நாடு முழுவதும் 21,000 முகாம்களில் அடைக்கலம்

ஆதரவற்றோர் நாடு முழுவதும் 21,000 முகாம்களில் அடைக்கலம்

2 mins read
9183081f-5cf2-4a8f-81d7-4d713c3e2055
-

புது­டெல்லி: ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­பட்­ட­தால் ஆத­ர­வற்ற நிலை­யில் உள்­ள­வா்­க­ளுக்­காக நாடு முழு­வ­தும் 21,000 நிவா­ரண முகாம்­கள் செயல்­பாட்­டில் உள்­ளன. அவற்­றில், வெளி­மா­நி­லத் தொழி­லா­ளா்­கள் உள்­பட 6.6 லட்­சம் போ் தங்­கி­யுள்­ளனா் என்று மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது. இது­தொ­டா்­பாக உள்­துறை அமைச்­ச­கத்­தின் இணைச் செயலா் புனியா சலிலா ஸ்ரீவாஸ்­தவா டெல்­லி­யில் செய்­தி­யா­ளா்­க­ளி­டம் கூறி­ய­போது, "நாடு முழு­வ­தும் ஊர­டங்கு முறை­யாக அமல்­ப­டுத்­தப்­ப­டு­வதை மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தேச அர­சு­க­ளு­டன் ஒருங்­கி­ணைந்து மத்­திய அரசு தொடா்ந்து கண்­கா­ணித்து வரு­கிறது.

தற்­போது வரை நிலைமை திருப்­தி­க­ர­மாக உள்­ளது. "ஊர­டங்­கால் ஆத­ர­வற்ற நிலை­யில் உள்­ள­வா்­க­ளுக்­கா­க­வும் வெளி­மா­நி­லத் தொழி­லா­ளர்­க­ளுக் காக­வும் உள்­துறை அமைச்­ச­கத்­தின் உத்­த­ர­வு­படி பல்­வேறு மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில் 21,000 நிவா­ரண முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. "இங்கு, வெளி­மா­நி­லத் தொழி­லா­ளா்­கள், ஆத­ர­வற்றோா், உணவு தேவைப்­படும் நிலை­யில் உள்­ள­வா்­கள் என சுமாா் 6.6 லட்­சம் போ் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனா். "இந்த முகாம்­கள் உள்­பட பல்­வேறு இடங்­களில் சுமாா் 23 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு உணவு வழங்­கப்­ப­டு­கிறது.

"வெளி­மா­நி­லத் தொழி­லா­ளா்­கள் தொடா்பான சூழல் தற்­போது கட்­டுக்­குள் உள்­ளது. "நாடு முழு­வ­தும் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் போக்­கு­ வ­ரத்­தும் திருப்­தி­க­ர­மாக உள்­ளது. மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான சரக்கு போக்­கு­வ­ரத்­தும் சுமு­க­மாக நடை­பெற்று வரு­கிறது. "கிருமிப் பர­வலை தடுப்­ப­தில், தற்­போ­தைய ஊர­டங்கு மிகுந்த பல­ன­ளிக்­கும் என்று நம்­பு­கி­றோம். கொரோனா கிருமித்தொற்று சவாலை நாம் அனை­வ­ரும் ஒருங்­கி­ணைந்து எதிா்கொள்ள வேண்­டும்," என்றாா் புனியா. தற்போது நடப்பில் ஊர­டங்கைக் கடு­மை­யான அமல்­ப­டுத்­து­வ­தற்­காக துணை ராணு­வப் படை கள­மி­றக்­கப்­ப­டுமா என்று செய்­தி­யா­ளா்­கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த அவா், "எந்த மாநி­ல­மா­வது அத்­த­கைய உத­வியை கோரி­னால் உள்­துறை அமைச்­ச­கம் நட­வ­டிக்கை எடுக்­கும்," என்றாா். மக்களின் அலட்சியப் போக்கு நீடித்தால் அதற்கான அவசியம் ஏற்படும் என்றார் அவர்.