சூரத்: கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பை அறிய குஜராத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய 27,000 பேரின் பெயா் பட்டியலை மாநில அரசிடம் மத்திய அரசு வழங்கியிருந்தது.
அதன்படி அவா்களது பாஸ்போர்ட்டில் குறிப்பிட்ட முகவரியிலுள்ளவா்களும் அவா்களின் உடல்நிலையும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவர்களில், சூரத்தைச் சேர்ந்த 42 பேரின் முகவரியை சோதனையிட்டபோது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட முகவரியில் அவா்கள் வசிக்கவில்லை என மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
காணாமல் போன இந்த 42 பேரும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியபோது மும்பை, பெங்களூரு, லக்னோ, சென்னை போன்ற விமான நிலையங்களில் வந்திறங்கியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

