ரயில்களில் 3.2 லட்சம் படுக்கைகள்

புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளை மாற்றியமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 3.2 லட்சம் படுக்கைகள் தயாராகும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மொத்தம் 20 ஆயிரம் ரயில் பெட்டிகளை மாற்றி சிகிச்சை அளிக்க வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டலங்கள் செய்து வருகின்றன.