கர்நாடகாவில் சிவப்பு மண்டலங்கள் அறிவிப்பு

கர்நாடகாவில் சிவப்பு மண்டலங்கள் அறிவிப்பு

1 mins read
c42f0502-5dcf-41b3-802f-7c82694cf7d8
பெங்­க­ளூரு உள்­ளிட்ட பகு­தி­களில் கொரோனா கிருமி பர­வும் வாய்ப்பு அதி­கம் இருக்­கும் பகு­தி­க­ளா­கக் கண்­ட­றி­யப்­பட்டு அவற்றை சிவப்பு மண்­ட­லம் அல்­லது அபா­யப் பகுதி என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. படம்: இபிஏ/JAGADEESH NV -

பெங்­க­ளூரு: பெங்­க­ளூரு உள்­ளிட்ட பகு­தி­களில் கொரோனா கிருமி பர­வும் வாய்ப்பு அதி­கம் இருக்­கும் பகு­தி­க­ளா­கக் கண்­ட­றி­யப்­பட்டு அவற்றை சிவப்பு மண்­ட­லம் அல்­லது அபா­யப் பகுதி என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் பெங்­க­ளூரு உள்­ளிட்ட 16 இடங்­களில் கிருமி பர­வும் வாய்ப்பு அதி­கம் உள்ள இடங்­க­ளாக அறி­வித்­தது தேசிய நோய் கட்­டுப்­பாட்டு மையம்.

இந்த நிலை­யில், கர்­நா­ட­கத்­தில் மைசூரு, உத்­தர கன்­னடா, பெங்­க­ளூரு, தட்­சிண கன்­னடா மற்­றும் சிக்­க­பல்­லப்­பூர் ஆகிய பகு­தி­களை சிவப்பு மண்­ட­ல­மாக கர்­நா­டக அரசு அறி­வித்­துள்­ளது.

இப்பகு­தி­க­ளைச் சுற்­றி­யி­ருக்­கும் சில கிரா­மங்­களும் அபா­ய பகு­தி­க­ளா­கக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. இது குறித்து கர்­நா­டக மாநில மருத்­து­வக் கல்­வித் துறை அமைச்­சர் சுதா­கர் கூறு­கை­யில், ஏற்­க­னவே இந்த பகு­தி­களில் தீவி­ரக் கண்­கா­ணிப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. 20 லட்­சம் தக­வல் தொழில்­நுட்ப நிபு­ணர்­கள் வந்துபோகும் இடம் என்­ப­தால் பெங்­க­ளூ­ரு­வில் கூடு­தல் கண்­கா­ணிப்பு தேவைப்­ப­டு­கிறது. இன்­னும் இரண்டு வாரத்­தில் மேலும் கண்­கா­ணிப்பு தீவி­ரப்­

ப­டுத்­தப்­படும் என்­றும் தெரி­வித்­தார். மாநில அரசு சில பகு­தி­களை சிவப்பு மண்­ட­ல­மாக அறி­வித்­தி­ருப்­ப­தால் அப்­ப­கு­தி­க­ளுக்கு கூடு­தல் கண்­கா­ணிப்பு வழங்க ஏது­வா­கிறது என்­றும் அவர் கூறி­னார்.