கிருமித்தொற்றை தடுக்க அமைக்கப்பட்ட ‘கிருமி நாசினி’ சுரங்கம்

கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கம் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதேபோல் மாநிலம் முழுவதும் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட வேண்டுமென பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பூரில் உள்ள தென்னாம்பாளையம் பகுதியில் நடைபெறும் காய்கறிச் சந்தைக்கு நூற்றுக்கணக்கானோர் வருகை புரிவது வழக்கம்.

விவசாயிகள் காய்கறி சில்லறை வியாபாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்வதை அடுத்து அங்கு நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் காய்கறிச் சந்தைக்கு வரும் அனைவரும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு சுரங்கம் போன்ற அமைப்பின் உள்ளே நுழைந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அந்தச் சுரங்கத்துக்குள் செல்பவர்கள் மீது சுமார் 5 விநாடிக்கு உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 16 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட இந்தச் சுரங்கப் பாதையை அமைக்க ஒரு லட்சம் ரூபாய் செலவானதாக அதை வடிவமைத்த தன்னார்வலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

“கொரோனா கிருமித் தொற்று தாக்குதலை உலக நாடுகள் எப்படி சமாளிக்கின்றன என்பதை இணையம் வழி கவனித்தபோது துருக்கி நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்தகைய கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

“எனவே, அதேபோன்று திருப்பூரிலும் சுரங்கம் அமைக்க முடிவு செய்தோம்,: என்கிறார் வெங்கடேஷ்.

பொதுமக்கள் காய்கறிச் சந்தைக்குள் நுழையும்போது இந்தச் சுரங்கத்துக்குள் கைகளைத் தூக்கிக் கொண்டு செல்லவேண்டும் என்றும், அப்போது 5 விநாடிகளுக்கு அவர்கள் மீது மழைச்சாரல் போல் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படும்.

இதேபோன்று சந்தையின் வெளிப்பகுதியிலும் சுரங்கம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இதற்கிடையே, சென்னையின் பிரபல வணிகவளாகத்தில் இயங்கும் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அந்த கடையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் மார்ச் 10 முதல் 17ஆம் தேதிக்குள் அந்தக்கடைக்குச் சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் பிரபல வணிக வளாகம் என்பதால் பாதிக்கப்பட்ட கடை ஊழியர்கள் மூலம் மேலும் பலருக்கு கிருமித் தொற்று பரவி இருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

#தமிழ்நாடு #திருப்பூர் #கிருமிநாசினி சுரங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!