கொரோனா கிருமியின் பிடியில் இருந்து தப்பிய தம்பதியர்

திருவனந்தபுரம்: கேர­ளா­வைச் சேர்ந்த மிக வய­தான தம்­ப­தி­யர் கொரோனா கிரு­மித் தொற்­றி­லி­ருந்து முழு­மை­யா­கக் குண­ம­டைந்­துள்­ள­னர். இது உல­கெங்­கி­லும் உள்ள கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்பு உள்­ள­வர்­க­ளி­ட­மும் மருத்­து­வத் துறை­யி­னர் மத்­தி­யி­லும் புதிய நம்­பிக்­கையை விதைத்­துள்­ளது.

கேர­ளா­வின் பத்­த­னந்­திட்டா பகு­தி­யைச் சேர்ந்­த­வர் தாமஸ் ஆப்­ர ­ஹாம். 93 வய­தான இவர், தன் மனைவி மரி­யம்­மா­வு­டன் (வயது 88) ரன்னி பகு­தி­யில் வசித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் இவர்­க­ளது மூன்று மகன்­களில் ஒரு­வர் தன் மனைவி, மக­னு­டன் இத்­தாலி சென்று வந்­தார். நாடு திரும்­பிய பிறகு அம்­மூ­வ­ருக்­கும் கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்பு இருப்­பது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து மூவ­ருக்­கும் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. அவர்­கள் குண­ம­டைந்து விட்டபோதி­லும் தாமஸ் ஆப்­ர­ஹா­முக்­கும் அவ­ரது மனை­விக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து இரு­வ­ரும் கோட்­ட­யம் மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

உலகெங்கும் ஆயிரக்கணக் கான உயிர்களை பலி வாங்கி யுள்ள கொரோனா கிருமியால் வயதானவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்­நி­லை­யில் 90 வய­தை கடந்த தாமஸ் ஆப்­ர­ஹா­மும் 88 வய­தான மரி­யம்­மா­வும் கொரோனா கிரு­மித் தொற்று ஏற்­பட்ட பிற­கும் தன்­னம்­பிக்­கை­யு­டன் சிகிச்சை பெற்­றுள்­ள­னர். ஒரு கட்­டத்­தில் இரு­வ­ரது உடல்­நி­லை­யும் மோச­ம­டைந்­த­போ­தி­லும் பின்­னர் அதி­லி­ருந்து மீண்டு வந்­துள்­ள­னர் என்று மருத்­து­வர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

மேலும், இத்­தம்­ப­தி­யர் குண­ம­டைந்­தி­ருப்­பது ஓர் அதி­ச­யம் என்­றும் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறை­யைப் பின்­பற்­றி­யதே தமது தாத்­தா­வும் பாட்­டி­யும் கிரு­மித் தொற்று பாதிப்­பி­லி­ருந்து மீண்டு வரக் கார­ணம் என தாம­ஸின் பேரன் ரிஜோ மோன்சி தெரி­வித்­துள்­ளார்.

தாத்தா தாம­சுக்கு மது, புகை ­பி­டித்­தல், புகை­யிலை பயன்­ப­டுத்து­தல் என எந்­த­வித கெட்­ட­ப­ழக்­க­மும் இல்லை என்­றும் உடற்­ப­யிற்­சி­கூ­டத்­துக்­குச் செல்­லா­ம­லேயே திட­காத்­தி­ர­மான உடல்­வா­கு­டன் இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“தாத்­தா­வுக்­குப் பழங்கஞ்­சி­யும் தேங்­காய் சட்­னி­யும்­தான் பிடித்­த­மான உணவு. சிகிச்­சை­யின்­போ­து­கூட அவற்­றைத்­தான் கேட்­டார். மர­வள்­ளிக்­கி­ழங்­கும் பலாப்­ப­ழ­மும்­கூட அவ­ருக்­குப் பிடிக்­கும்.

“பாட்­டிக்கு மீன்­தான் பிடித்­த­மான உணவு. இரு­வ­ரும் மருத்­துவ ­ம­னை­யி­லி­ருந்து வீடு திரும்­பக் காத்­தி­ருக்­கி­றோம்,” என்­கி­றார் ரிஜோ மோன்சி. தாமஸ் ஆபி­ர­ஹாம் மரி­யம்மா தம்­ப­தி­ய­ருக்கு மூன்று பிள்­ளை­கள், ஏழு பேரக் குழந்­தை­கள், 14 கொள்­ளுப் பேரக் குழந்­தை­கள் உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!