விலை, எடை குறைவான சுவாசக் கருவி: இந்திய மருத்துவரின் அசத்தல் கண்டுபிடிப்பு

புது­டெல்லி: இந்­திய மருத்­து­வர் உரு­வாக்­கி­யுள்ள அள­வில் சிறிய சுவா­சக் கரு­வி­கள் ‘கொவிட் 19’ நோய்க்கு அளிக்­கப்­படும் சிகிச்­சை­யில் வெகு­வாக கைகொ­டுத்து வரு­கிறது. 

ரொட்டி வாட்­டும் கரு­வி­யைப் போன்று அள­வில் சிறி­தாக உள்ள இந்த சுவா­சக் கரு­வி­க­ளைக் குறைந்த விலை­யில் தயா­ரிக்க முடி­யும். இதை­ய­டுத்து இவற்­றின் உற்­பத்தி அளவை அதி­க­ரிக்­கு­மாறு இந்­திய அரசு அதன் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தைக் கேட்டு கொண்­டுள்­ளது.

“தற்­போது பயன்­பாட்­டில் உள்ள அள­வில் பெரிய சுவா­சக் கரு­வி­க­ளின் விலை  10,000 அமெ­ரிக்க டால­ருக்­கும் அதி­கம். ஆனால், நாங்­கள் தயா­ரித்­துள்ள இந்த சுவா­சக் கரு­வி­யின் விலை சுமார் 2,000 டாலர்­கள் மட்­டுமே. மேலும் இவற்றை எளி­தாக இட­மாற்­றம் செய்ய முடி­யும்,” என்­கி­றார் இதை உரு­வாக்­கிய இரண்டு பேரில் ஒரு­வ­ரான தீபக் அகர்­வால். 

இவ­ரும் திவா­கர் வைஷ் என்ற விஞ்­ஞா­னி­யும் இணைந்து உரு­வாக்­கிய இந்த விலை குறை­வான சுவா­சக் கரு­வி­யின் மாதாந்­திர உற்­பத்தி அள­வா­னது 500 என்­ப­தி­லி­ருந்து 20,000 கரு­வி­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது.

கொரோனா கிரு­மி தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு சுவா­சக் கோளாறு ஏற்­படும். அத்­த­கை­ய­வர் ­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­கான சுவா­சக் கரு­வி­கள் (வென்­டி­லேட்­டர்) இந்­தி­யா­வில் தற்­போது 40,000 மட்­டுமே உள்­ளன. 

இதனால் கிருமித் தொற்றுப் பரவல் சமூகப் பரவலாக மாறும் பட்சத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க போதுமான சுவாசக் கருவிகள் இல்லாமல் தவிக்க நேரிடும் என நிபுணர்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்  தீபக் அகர்வால் உருவாக்கியுள்ள இந்தப் புதிய கருவி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

“இது வெறும் 3.5 கிலோ எடையுள்ள கருவி. ஒரு தங்கு விடுதியை மருத்துவமனையாக மாற்றவேண்டும் என்றால் இந்தக் கருவியை அங்கு சுலபமாகக் கொண்டு செல்ல முடியும். மேலும் விடுதி அறையில் இந்தக் கருவியை வைத்து உடனடியாக நோயாளிகளுக்கு சிகிச்சையை தொடங்க முடியும். 

“மேலும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய நோயாளிகளை இந்தக் கருவியுடன் வீட்டுக்கும் அனுப்பி வைக்கலாம்,” என்கிறார் தீபக் அகர்வால்.