நாட்டில் கிருமி தொற்று பெருக காரணமான 10 இடங்கள்

புது­டெல்லி: கொரோனா கிரு­மி தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 1,900ஐ கடந்­துள்ள நிலை­யில் மத்­திய அரசு நோய்த்­தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­களை முடுக்கி விட்­டுள்­ளது.

நாட்­டில் கொரோனா கிரு­மி தொற்று பெருக மையப்­புள்­ளி­களா­கத் திகழ்ந்த 10 இடங்­களை மத்­திய அரசு அடை­யா­ளம் கண்­டுள்­ள­தா­க­வும், அவை அனைத்­தும் தீவிர கண்­கா­ணிப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. 

கடந்த ஒரு வார காலத்­தில்­தான் நாட்­டில் கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வல் வேக­மா­கி­யுள்­ளது. இந்­நி­லை­யில் டெல்லி, கேரளா, உத்­த­ர­ப்பி­ர­தே­சம், மகா­ராஷ்­டிரா, குஜ­ராத் மற்­றும் ராஜஸ்­தான் ஆகிய 6 மாநி­லங்­களில் உள்ள 10 இடங்­கள்­தான் கொரோனா கிரு­மித் தொற்று பர­வ­லுக்­குக் கார­ண­மாக அமைந்­துள்­ள­தாக மத்­திய அரசு உறுதி செய்­துள்­ளது.

டெல்­லி­யில் நடை­பெற்ற சமய நிகழ்ச்சி ஒன்­றில் வெளி­நாட்­டி­னர் உட்­பட நூற்­றுக்­க­ணக்­கா­னோர் பங்­கேற்­ற­தா­க­வும் இதன் ­மூ­ல­மாக நாடு முழு­வ­தும் கிரு­மித் தொற்று பர­வி­யது என்­றும் இந்­திய ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன. 

ராஜஸ்­தா­னில் மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. அவர் மூல­மாக சிகிச்­சைக்கு வந்த நோயா­ளி­கள், அவர் பணி­யாற்­றும் மருத்­து­வ­ம­னை­யின் ஊழி­யர்­க­ளுக்­கும் நோய்த்­தொற்று பர­வி­யுள்­ளது. கேர­ளா­வை பொறுத்­த­வரை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து திரும்­பி­ய­வர் ­களால் கிரு­மித்­தொற்று பர­வி­யது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 

டெல்லி சமய நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­வர்­கள் மூலம் தமி­ழ­கம், தெலுங்­கானா, மகா­ராஷ்­டிரா மற்­றும் காஷ்­மீ­ருக்­கும் கொரோனா கிரு­மித் தொற்று பர­வி­யுள்­ளது. 

மொத்­தத்­தில் டெல்லி, கேரளா, உத்­த­ர­ப்பி­ர­தே­சம், மகா­ராஷ்­டிரா மாநி­லங்­களில் தலா இரண்டு இடங்­களை கொரோனா கிரு­மித் தொற்­றின் மையப் புள்­ளி­க­ளாக மத்­திய அரசு வகைப்­ப­டுத்தி உள்­ளது. 

இதே­போல் குஜ­ராத் மற்­றும் ராஜஸ்­தா­னில் தலா ஓரி­டம் இவ்­வாறு அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து இந்த 10 பகு­தி­க­ளி­லும் மத்­திய சுகா­தா­ரத் துறை தீவிர கவ­னம் செலுத்தி வரு­கிறது. 

இந்த 10 இடங்­க­ளைச் சேர்ந்த பல­ருக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்யப்பட்­டுள்­ளது.

இதுபோன்று மேலும் சில இடங்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பட்சத்தில் கொரோனா கிருமி தொற்றுப் பரவல் அடுத்தக் கட்டத்தை எட்டாது என மருத்துவத்துறை, சுகாதாரத்துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தீவிரமடையும் சுகாதார நடவடிக்கைகள்

நாடு முழுவதும் கிருமி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. சாலைகள், வீடுகள், அலுவலகங்கள் என பல்வேறு பகுதிகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகின்றன.