ஒற்றுமை ஒளிவிளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்

ஒற்றுமை ஒளிவிளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்

1 mins read
e1cbb423-5f43-4a05-8020-401170bb2bcb
பிரதமர் மோடி வியாழக்கிழமை பின் நேரத்தில் காணொளி மூலம் மாநில முதல்வர்களுடன் கொரோனா நிலவரம் பற்றி கலந்து ஆலோசித்தார். ஊரடங்கு காலம் முடிந்து பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான உத்திகள் குறித்த யோசனைகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும். இதில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். . படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: கொரோ­னா­ கிருமியைக் கட்­டுப்­ப­டுத்த இந்­தியா விதித்­துள்ள மக்­கள் ஊர­டங்கு உல­குக்­கே முன்­உதா­ர­ண­மாக விளங்­கு­கிறது என்று பிர­தமர் மோடி தெரி­வித்­தார்.

ஏப்­ரல் 14 வரை அம­லில் இருக்­கும் அந்த ஊர­டங்கை மீறா­மல் மக்­கள் வீட்­டில் இருந்து அனை­வரும் ஒன்­றி­ணைந்­தால் மட்­டுமே கொரோ­னா­வைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யுமென அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இந்த ஒற்­று­மையை உல­குக்­குப் பறை­சாற்­றும் வகை­யில் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை மக்­கள் வீட்­டில் இருந்­த­வாறே கொரோ­னா­வுக்கு எதி­ராக மாபெ­ரும் சக்­தியை வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்று பிர­த­மர் வேண்­டு­கோள் விடுத்­தார்.

அதன்­படி நாளை இரவு 9 மணிக்­குத் தொடங்கி 9 நிமி­டங்­கள் மின் விளக்­கு­களை அணைத்து­விட்டு மெழு­கு­வர்த்தி, கைபேசி விளக்­கு­களை ஒளிர விட வேண்டு மென அவர் கேட்­டுக்­கொண்­டார்.

பிர­த­மர், கொரோனா கிருமி தொடர்­பாக இருமுறை நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்றி இருக்­கி­றார். முதல்வர்­களு­டன் காணொளி மூலம் ஆலோ­சனை நடத்தி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், நேற்று அவர் காணொ­ளிச் செய்தி ஒன்றை மக்­க­ளுக்கு வெளி­யிட்­டார். அதில் இந்த விவ­ரங்­க­ளைக் குறிப்­பிட்டு உள்ள திரு மோடி, ஊர­டங்­கை மீறாத நாட்டு மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

இந்த நெருக்­க­டி­யான நேரத்­தில் 130 கோடி இந்­தி­யர்­களும் ஒன்­றி­ணைந்து இருப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது என்று குறிப்­பிட்ட அவர், ஒற்­று­மை­யு­டன் கொரோ­னாவை வீழ்த்­து­வோம் என்றும் ஒளி­ம­ய­மான காலத்தை இந்­தி­யா­வுக்கு ஏற்­ப­டுத்­து­வோம் என்றும் சூளு­ரைத்­தார்.

நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ஒன்று கூடி விளக்­கேற்­றா­மல் ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கு­மா­றும் பொது­மக்­களை அவர் கேட்டுக்­கொண்­டார்.