குவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று

குவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று

1 mins read

குவைத்: மத்­திய கிழக்கு நாடான குவைத்­தில் இந்­தி­யாவைச் சேர்ந்த 24 பேரை கொரோனா கிருமி பாதித்து உள்­ளது.

வளை­கு­டா­வில் லட்­சக்­க­ணக்­கான இந்­தி­யத் தொழி­லா­ளர்­கள் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளின் நிலை குறித்து இந்­தியா கவலை அடைந்து உள்ளது.

இந்­நி­லை­யில், அங்கு கடந்த சில நாட்­களில் புதி­தாக 28 பேருக்­குக் கொரோனா கிருமி தொற்­றி­ய­தா­க­வும் அவர்­களில் 24 இந்­தி­யர்­கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மற்­ற­வர்­கள் பங்­ளா­தேஷ், நேப்­பா­ளத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் இவர்­க­ளை­யும் சேர்த்து குவைத்­தில் கொரோனா கிரு­மிப் பாதிப்பு எண்­ணிக்கை 317 ஆகி­விட்­ட­தா­க­வும் குவைத் சுகா­தார அமைச்சு கூறி­ய­தாக குவைத் டைம்ஸ் செய்­தித்­தாள் தெரி­வித்­துள்­ளது.