இந்தியாவுக்குப் பாராட்டு, உதவி

இந்தியாவுக்குப் பாராட்டு, உதவி

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கொடூ­ரம் அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், அந்­தக் கிரு­மியை எதிர்த்­துப் போராட இந்­தி­யா­வுக்கு ஒரு பில்­லி­யன் டாலர்­ தொகையை அவ­ச­ர­கால நிதி­யாக வழங்­கு­வ­தாக உலக வங்கி அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், கொரோனா வைச் சமா­ளிக்க இந்­தியா தொலை­நோக்­குக் கண்ணோட்டத்­து­டன் துணிச்­ச­லாக ஊர­டங்கை முன்­ன­தா­கவே விதித்து இருக்­கிறது என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தொற்­று­நோய்த்­துறை சிறப்­புத் தூதர் டாக்­டர் டேவிட் நபாரோ பாராட்­டி­னார்.

என்­றா­லும் கொரோனா விரை­வில் மறை­யும் என்­ப­தற்கு இது­வரை அறி­குறி தெரிய வில்லை இல்லை என்­றும் அவர் கூறி­னார்.