ஏப்ரல் 15க்குப் பின் உலக விமானங்களுக்கு அனுமதி, ஆனால்...

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஊர­டங்கு முடிந்த பின்­னர் ஏப்­ரல் 15ஆம் தேதிக்­குப் பிறகு அனைத்­து­லக விமா­னங்­கள் இந்­தியா வர அனு­மதி அளிக்­கப்­படும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இருந்­தா­லும் எந்­தெந்த நாடு­க­ளி­லி­ருந்து விமா­னங்­கள வர அனு­ம­திக்­கப்­படும் என்­பது சூழ­லுக்கு ஏற்­ற­படி தீர்­மா­னிக்­கப்­படும் என்று மத்­திய விமான போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் ஹர்­தீப் சிங்புரி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இந்­தி­யர்­களை ஏற்றி வரும் விமா­னங்­கள், ஊர­டங்கு காலம் முடி­யும் வரை காத்­தி­ருக்க வேண்­டும் என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், ஊர­டங்கு முடிந்த பிறகு மேற்­கொள்­ளும் விமானப் பய­ணங்­க­ளுக்­கான முன்­ப­தி­வு­களை விமானச் சேவை நிறு­வ­னங்­கள் இப்­போதே ஏற்­க­லாம் என்­றும் ஒரு­வேளை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டால் முன்­ப­தி­வு­களை ரத்து செய்ய வேண்டி­ய­நிலை வரும் என்­றும் விமானப் போக்கு­வரத்து துறைச் செய­லர் பிர­தீப் சிங் கரோலா கூறி­னார்.

இதனிடையே, சீனாவின் ஷாங்காய் நகரத்திலிருந்து மருந்துப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வரும் வகையில் சரக்கு விமானச் சேவைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து புதுடெல்லியிலிருந்து ஷாங்காய்க்கு இன்றும் நாளையும் சரக்கு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சால் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!