கொரோனா: பாதிப்பு-2,301 பேர்; மரணம்-56 பேராக உயர்ந்தது

கொரோனா: பாதிப்பு-2,301 பேர்; மரணம்-56 பேராக உயர்ந்தது

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மோத்­தம் 56 பேர் உயி­ரி­ழந்துவிட்டதாக மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

கிருமி பாதித்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 2,301 ஆக உயர்ந்­துள்­ளது என்­றும் கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் புதி­தாக 336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் நேற்று அது குறிப்­பிட்­டது.

கொரோனா கிருமி பாதித்­த­வர்­களில் 157 பேர் சிகிச்­சைக்­குப் பிறகு உடல் நலம் பெற்று வீடு திரும்­பி­விட்­ட­னர்.

மகா­ராஷ்­டி­ரா, தமிழ்­நாடு, கேரளா ஆகிய மாநி­லங்­களில் பாதிப்பு அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.