இந்தியாவிடம் மருந்து கேட்கும் டிரம்ப்

வாஷிங்­டன்: இந்­தி­யா­வில் மருந்­துப் பொருட்­க­ளுக்­குத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மலே­ரி­யா­வுக்­கான மருந்­தைத் தந்து உதவ வேண்­டும் என்று இந்­தி­யப் பிர­த­மர் மோடி­யி­டம் அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

கொரோனா தொற்று நோயா­ளி­க­ளுக்கு உயிர்­காக்­கும் மருந்­தாக மலே­ரி­யா­வுக்கு வழங்­கப்­படும் ஹைட்­ராக்­ஸி­கு­ளோ­ரோ­கு­யின் மாத்­தி­ரை­களை வழங்­க­லாம் என்று இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் கடந்த மாதம் பரிந்­து­ரைத்­தது.

அது போல், அமெ­ரிக்க உணவு மற்­றும் மருந்து நிர்­வா­க­மும் மலே­ரியா மருந்­தைப் பயன்­ப­டுத்த ஒப்­பு­தல் அளித்­த­தோடு, நியூ­யார்க்­கில் சுமார் 1,500 நோயா­ளி­க­ளுக்­கான சிகிச்­சை­யில் மலே­ரியா மருந்து மற்­றும் வேறு சில மருந்­து­க­ளின் கல­வை­யும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

இந்த மாத்­தி­ரை­களும் நன்­றா­கப் பயன் அளிப்­ப­தாக அதி­பர் டிரம்ப் அண்­மை­யில் ஊட­கங்­கள் மத்­தி­யில் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, மலே­ரி­யா­வைக் குணப்­ப­டுத்­தும் மாத்­தி­ரை­க­ளின் ஏற்­று­ம­தியை மத்­திய அரசு கடந்த மாதம் 25ஆம் தேதி தடை செய்­தது.

ஆனால், இந்­தி­யா­வி­டம் மிகப்­பெ­ரிய அள­வில் ஹைட்­ராக்­ஸி­கு­ளோ­ரோ­கு­யின் மாத்­தி­ரை­களை அமெ­ரிக்கா முன்பே கேட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் தடை­யால் அந்த மாத்­தி­ரை­கள் அமெ­ரிக்­கா­வுக்­குக் கிடைப்­ப­தில் சிக்­கல் இருப்­ப­தால் பிர­த­மர் மோடி­யி­டம் தடையை விலக்­கும்­படி அதி­பர் டிரம்ப் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இது­தொ­டர்­பாக மோடி­யு­டன் தான் பேசி­யது பற்றி வாஷிங்­ட­னில் டிரம்ப் செய்­தி­யா­ளர்­க­ளுக்­குப் பேட்டி அளித்­தார்.

"நான் இந்­தி­யப் பிர­த­மர் மோடி­யு­டன் சனிக்­கி­ழமை காலை தொலைப்­பே­சி­யில் பேசி­னேன். இரு நாடு­களும் கொவிட்-19 கிரு­மியை ஒழிப்­ப­தில் ஒற்­று­மை­யு­டன் செயல்­படச் சம்­ம­தித்­துள்­ளோம்.

"அமெ­ரிக்­கா­வுக்கு ஆத­ர­வாக உத்­த­ர­வு­க­ளைத் தளர்த்தி இந்­தியா ஹைட்­ராக்­ஸி­கு­ளோ­ரோ­கு­யின் மாத்­தி­ரை­களை ஏற்­று­மதி செய்­தால் நாங்­கள் மிகுந்த மகிழ்ச்சி அடை­வோம்," என்று டிரம்ப் தெரி­வித்­தார்.

தேவைப்­பட்­டால் மருத்­து­வர்­க­ளின் ஆலோ­ச­னைக்­குப் பிறகு தான் அந்த மருந்தை எடுத்­துக் கொள்­வேன் என்­றும் அவர் சொன்­னார். மக்­களும் அந்த மருந்தை எடுத்­துக் கொள்­ள­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

ஆனால், அந்த மருந்து உத­வு­கி­றதா என்­பதை உறுதிசெய்ய போதுமான தக­வல்­கள் இல்லாத நிலையில், டிரம்ப் அவசரமாக மக்களிடம் இவ்வாறு கூறிவிட்டதாக அமெரிக்க மருத்துவ ஆலோசகர்கள் கூறியுள்ளார்.

பெரு­ம­ள­வில் உயி­ரிழப்­பு­கள் நேரும்

கிரு­மித்தொற்­றுப் பர­வல், உயி­ரிழப்பு குறித்து மேலும் பேசிய டிரம்ப், அடுத்த இரு வாரங்­களில் பெருமளவில் உயி­ரி­ழப்­பு­கள் நேரும் என அச்­சம் தெரி­வித்­துள்­ளார்.

"அமெ­ரிக்க மக்­க­ளுக்கு அடுத்த இரு வாரங்­கள் மிக, மிக மோச­மா­ன­தாக இருக்­கப் போகின்றன. கொரோனா கிரு­மித் தொற்­றால் ஏரா­ள­மான உயி­ரி­ழப்­பு­கள் நேரி­ட­லாம். இது­நாள் வரை அது­போன்ற சூழலை நாடு பார்த்­தி­ரா­த­தாக இருக்­கும்," எனத் தெரி­வித்­தார்.

அமெரிக்காவில் கிரு­மித் தொற்­றால் 311,000த்­துக்கு மேற்­பட்­டோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 8,400க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­த­னர். அதில் நியூயார்க் மாநிலத்தில் மட்டும் 3,565 பேர் பலியாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!