சுடச் சுடச் செய்திகள்

அரசின் உதவி நடவடிக்கைகள் பற்றி அறிந்திராத புலம்பெயர் தொழிலாளர்கள்

புது­டெல்லி: மத்­திய, மாநில அரசு­களின் அவ­ச­ர­கால உதவி நட­வடிக்­கை­கள் குறித்து 60 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்ட புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­பது ‘ஜன் சகாஸ்’ எனும் அற­நி­று­வ­னம் மேற்­கொண்ட கருத்­தாய்­வின்­மூ­லம் தெரி­ய­வந்து இருக்­கிறது.

அந்த அமைப்பு கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தொலை­பேசி வழி­யாக 3,196 பேரைத் தொடர்­பு­கொண்டு, அர­சின் நிவா­ரண நட­வ­டிக்­கை­கள் குறித்து கேட்­ட­றிந்­தது. அந்த ஆய்வு முடி­வு­கள் ‘புல­னா­காக் குடி­மக்­க­ளின் குரல்­கள்’ என்ற தலைப்­பில் அறிக்­கை­யாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அதில், ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 62 விழுக்­காட்­டி­னர் அர­சாங்­கத்­தின் அவ­ச­ர­கால நல்­வாழ்வு நட­வ­டிக்­கை­கள் பற்றி அறிந்­தி­ருக்­க­வில்லை. அவற்­றைப் பற்றி அறிந்­தி­ருந்­தா­லும் எங்கு சென்று, யாரி­டம் உதவி கேட்­பது எனத் தெரி­ய­வில்லை என 37 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

பெரும்­பா­லும் ஆண்­க­ளி­டமே இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது. அவர்­கள் அனை­வ­ரும் வட­மா­நி­லங்­களைச் சேர்ந்­த­வர்­கள்.

ஆய்­வில் பங்­கேற்ற தொழி­லா­ளர்­களில் 55 விழுக்­காட்­டி­னர் நாளொன்­றுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை வரு­மா­னம் ஈட்டி வந்­த­தா­க­வும் அந்­தப் பணமே சரா­சரி­யாக நான்கு பேரைக் கொண்ட தங்­க­ளது குடும்­பத்­திற்கு ஆதா­ரம் என்­றும் சொன்­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. 33 விழுக்காட்டினர் அரசாங்கத்தின் முடக்கநிலை அறிவிப்பால் நகரங்களில் சிக்கிக் கொண்டதாகவும் உணவு, குடிநீர், பணமின்றி தவித்து வருவதாகவும் கூறினர்.