வெங்காயத்திற்கு வந்த சோதனை

வெங்காயத்திற்கு வந்த சோதனை

1 mins read
c2c6a8fa-05e4-4072-99b8-bcd950a752da
இந்தியாவின் ஆகப் பெரிய வெங்காயச் சந்தை மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் உள்ளது. அந்தச் சந்தைக்கு ரொட்டி விநியோகம் செய்த ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. -

நாசிக்: இந்தியாவின் ஆகப் பெரிய வெங்காயச் சந்தை மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் உள்ளது. அந்தச் சந்தைக்கு ரொட்டி விநியோகம் செய்த ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுக்க கொண்டு செல்லப்படும் வெங்காய மூட்டைகள் மீது அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. நாசிக் சந்தைக்குள்ளே இருந்து எவரும் வெளியில் செல்லவும் வெளியே இருப்பவர் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து வெங்காய மூட்டைகளைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெங்காய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.