வீட்டுக்கு வராதீர்கள் என மிரட்டுவதாக காவல்நிலையத்தில் மருத்துவர் புகார்

வீட்டுக்கு வராதீர்கள் என மிரட்டுவதாக காவல்நிலையத்தில் மருத்துவர் புகார்

1 mins read
3cdafe7e-2253-4b5d-866d-445acea22548
குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் சஞ்சீவனி. கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய பணி அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. படம்: ஊடகம் -

சூரத்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களான எங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு வரக் கூடாது என்று தங்களது அக்கம்பக்கத்தினர் மிரட்டுவதாக குஜராத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் சஞ்சீவனி. கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய பணி அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், "நீங்கள் வீட் டுக்கு வராதீர்கள், உங்களுக்கும் நிச்சயம் கொரோனா தொற்றியிருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் வீட்டுக்கு வந்தால் கொரோனா எங்களுக்கும் பரவிவிடும். எனவே வீட்டுக்கு வராதீர்கள்," என்று அக்கம்பக் கத்தினர் மிரட்டுகிறார்கள்.

இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று மருத்துவர் சஞ்சீவனி தெரி வித்துள்ளார்.