இந்தியாவில் 4,778 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் 4,778 பேருக்கு பாதிப்பு

1 mins read
509c761b-da35-457a-9149-06beb6217dbc
அகமதாபாத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று உள்ளதா என்று சோதிக்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கிருமியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியா 'கொவிட் 19 டிரேக்கர்' நேற்றைய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் மொத்தம் 4,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 400 பேருக்கு புதிதாக கிருமித் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 என்றும் நோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் 382 பேர் என்றும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் இதுவரை 52 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் புதிதாக 30 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அம் மாநிலத்தில் மொத்த மக்களின் பாதிப்பு 308ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 868 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டு, 45 பேர் பலியாகி இருக்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 621 பேர் பாதிக்கப்பட்டு, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் 525 பேர் பாதிக்கப்பட்டு, ஏழு பேர் பலியாகி யுள்ளனர். இந்தியாவில் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்ட நபர்களில் 63% பேர் 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள். இதன்மூலம் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.