இந்தியாவிடம் உதவிகோரும் பிரேசில் அதிபர்

இந்தியாவிடம் உதவிகோரும் பிரேசில் அதிபர்

1 mins read
4590aaab-b177-4b5e-a0dc-55e7c4949e3d
பிரேசில் அதிபர் போல்சனேரோ (நடுவில்) ஹைராக்ஸிக்ளோ ரோகுயின் மருந்துகளை அனுப்பி உதவுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இடமிருப்பவர் பொருளியல் துறை அமைச்சர் பாவ்லோ கிட்ஸ், வலமிருப்பவர் சுகாதார அமைச்சர் லுயிஸ் ஹென்ரிக் மன்டெட்டா. படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: கொவிட்-19 கிருமித் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதில் ஹைராக்ஸிக்ளோ ரோகுயின் மருந்திற்கு முக்கிய பங்கு இருப்பதை மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்ட நிலையில் அதன் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது இந்தியா. ஆனால் அதிபர் டிரம்ப்பின் அதிருப்தி பேச்சைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு மருந்து அனுப்ப இந்தியா சம்மதித்தது. இந்நிலையில், பிரேசில் அதிபர் போல்சனேரோ மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ராமாயணத்தை மேற்கோள் காட்டியுள்ள அவர், "அனுமன் சிரஞ்சீவி மலையையே கொண்டு வந்து லட்சுமணனைக் காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக் ஸிக்ளோரோகுயினை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும்," என கூறியுள்ளார். சில நட்பு நாடுகளும் இந்தியா விடம் மருந்து கேட்டு கோரிக்கை விடுத்துள்ளன.