புதுடெல்லி: அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் ஏழாண்டு சிறை

புதுடெல்லி: அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் ஏழாண்டு சிறை

1 mins read
d002f864-606e-4ae0-a3ef-32b4d2e4c9c9
அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டு மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது. படம்: ஊடகம் -

புதுடெல்லி: ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி சில இடங்களில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதாகவும் அதிக விலைக்கு விற்பதாகவும் மத்திய அரசுக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் கடுமையான சட்டத்தை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.